400m தடை தாண்டலில் கெரோன் கிளெமென்டுக்குத் தங்கம்!
Saturday, August 20th, 2016
நடைபெற்றுவரும் றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் ஐக்கிய அமெரிக்காவின் கெரோன் கிளெமென்ட் தங்கம் வென்றார்.
30 வயதான கிளெமென்ட், போட்டித் தூரத்தை 47.73 செக்கன்களில் கடந்து தங்கம் வென்றிருந்ததுடன் கென்யாவின் பொனிஃபேஸ் முசேரு வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், துருக்கியின் யஸ்மனி கொப்பெல்லோ வெண்கலப் பதக்கம் வென்றார்.
இரண்டு தடவை உலக சம்பியனான கிளெமென்ட், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் எட்டாம் இடத்தையே பெற்றிருந்த நிலையில், தற்போது 2016ஆம் ஆண்டு றியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
Related posts:
வில்லியம்சனின் அபார சதம்: வென்றது நியூசிலாந்து!
கே.சி.சி.சி. வெற்றிக்கிண்ணம் காலிறுதியில் பரீஸ் அணி!
மீண்டும் அணிக்கு திரும்பும் தினேஷ் சண்டிமல்!
|
|
|


