4வது ஒரு நாள் போட்டி நடப்பதில் சிக்கல்!

Wednesday, August 30th, 2017

நாளை கொலும்பில் நடக்கவுள்ள இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-ஆவது போட்டி தொடர்பில் நடுவர் ஆண்டி பைக்ராப்ட், இலங்கை அரசிடம் உத்திரவாதம் கேட்டுள்ளார்.

3-வது போட்டியில் ஏற்ப்பட்டதைபோல தேவையில்லாத கலவரம் இருக்காது என் உறுதி கொடுங்கள் என போட்டியின் நடுவர் ஆண்டி பைக்ராப்ட் கோரிக்கை வைத்துள்ளார்

பல்லகேலேவில் நடந்த இந்தியா, இலங்கை இடையேயான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.போட்டியின் 45- வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி பெரும் சூழல் உருவாகியுள்ளதை அறிந்த இலங்கை ரசிகர்கள் பலரும் மைதானத்தில் தங்களிடமிருந்த பாட்டில்களை தூக்கி ஏறிந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.மைதானத்துக்குள் கலவரத் தடுக்க பொலிசார் வரவழைக்கப்பட்டு ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.இதனால் இந்தியாவின் வெற்றி 35 நிமிடங்கள் தள்ளி போனது.

ரசிகர்களின் செயலால் இலங்கை அணிவீரர்கள் பலரும் கவலை படிந்த முகத்துடன் மைதானத்தில் குழுமியிருந்தனர்.இதனால் அடுத்த போட்டிகளில் இதுபோன்ற கலவரம் மற்றும் சம்பவங்கள் நடைபெற கூடாது. அதற்காக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என உத்திரவாதம் கேட்டுள்ளோம் என ஆண்டி பைக்ராப்ட் தெரவித்துள்ளார்.இதனால், இந்தியா-இலங்கை இடையேயான 4வது ஒரு நாள் போட்டி நடைபெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது

Related posts: