2024 T20 தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் – வீரர் அரவிந்த டி சில்வா வலியுறுத்து!

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அசலங்க, போட்டியின் போக்கை கணிக்கும் திறன் மற்றும் பொறுப்புள்ள துடுப்பாட்டம் ஆகிய இயலுமைகளை கொண்டுள்ளதாக அரவிந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இது மைதானத்திற்கு வெளியில் இருந்தான ஒரு பார்வை எனவும் வீரர்களுடன் கலந்தாலோசிக்கும் திட்டம் இல்லை எனவும் அரவிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தனியாரிடமிருந்து மின் கொள்வனவு தொடர்பில் விசேட குழு!
அவுஸ்திரேலிய காட்டுத்தீ: பூமியை சுற்றி வலையத்தை ஏற்படுத்தும் – நாசா!
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றி!
|
|