2024 ஒலிம்பிக் போட்டி நடத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் 3 நகரங்கள்!
Friday, February 3rd, 2017
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு இன்று மாலைக்குள் மூன்று நகரங்கள் தங்கள் இறுதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இருக்கின்றன.
இதுவரை இரண்டு முறை ஏற்கெனவே இந்த போட்டிகளை நடத்தியிருக்கும் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் பாரிஸ் இதற்கு போட்டியிடும் முன்னிலை நகரங்களாக இருக்கும் நிலையில், ஹங்கேரியின் தலைநகரான பூதபெஸ்ட்டும் இதற்கு போட்டியிடுகின்றது.
இந்த ஒலிம்பிக்ஸை நடத்துகின்ற முன்மொழிவு பற்றி மக்கள் கருத்துகணிப்பு நடத்த வேண்டும் என்ற பரப்புரையாளர்கள் முயற்சி வெற்றியடைந்துவிட்டால், ஹங்கேரியின் இந்த முயற்சி குலைந்துவிடும் என்று பிபிசியின் விளையாட்டு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால், பாரிஸில் நடத்துவது என்ற பிரான்ஸின் கோரிக்கை தடைபடலாம்.
சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குடிவரவை தடை செய்திருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் செயலாணையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறைக்கின்ற பரப்புரையை லாஸ் ஏஞ்சலஸ் மேற்கொள்ள வேண்டியுள்ளது,
இந்த ஆண்டின் இறுதியில், பெரு நாட்டு தலைநகரான லிமாவில் நடைபெறும் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இந்த மூன்று நகரங்களில் எந்த நகரில் நடைபெறும் என்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தீர்மானம் அறிவிக்கப்படும்.

Related posts:
|
|
|


