2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் – பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடம்!

Tuesday, July 30th, 2024

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வருகின்றன.

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் 6 தங்கங்களை வென்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

ஜப்பான் இதுவரை 6 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக 12 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரான்ஸ் இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது. சீனா 5 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாமிடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா 5 தங்கம், 4 வெள்ளி அடங்கலாக 9 பதக்கங்களை வென்றுள்ளது.

இதுதவிர தென்கொரியா 5ஆம் இடத்திலும், அமெரிக்கா 6ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: