2011 ஆம் ஆண்டு உலக கிண்ண சர்ச்சை தொடர்பில் முரளி கருத்து!

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற உலக கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தமைக்கான காரணம் ஆட்ட நிர்ணயம் இல்லை என இலங்கை அணியின் முன்னால் பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியா அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு காரணம், அணியினால் மேற்கொள்ளப்பட்ட தவறான கணக்கீடுகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனுடன் இலங்கை அணி இரண்டாவதாக துப்பாடியிருந்தால் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்க கூடிய வாய்ப்பு இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாணயசுழற்சியின் முக்கியத்துவம் குறித்து அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
சர்ச்சைகளை சாதனையாக்கியவர்- மஹேல!
ஜாம்பவான்கள் பங்கேற்கும் டி10 கிரிக்கெட் தொடர்!
மகளிர் உலகக் கிண்ண கால்பந்து தொடர் பிரான்ஸில்!
|
|