2007 ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது  இலங்கை!

Sunday, March 27th, 2016

இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சம்பியனான இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் அதிரடியாக கடைசி ஓவர் வரை உறுதியாக நின்று ஆடி 73 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த போதிலும் அவரால் அணியின் தோல்வியை தடுக்க முடியவில்லை.

முன்னதாக இலங்கை அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே இலங்கை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இந்த தோல்வியின் மூலம் 2007 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதன்முறையாக டி20 உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வாய்ப்பை இலங்கை இழந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது. அதில் பட்லர் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை எடுத்தார்.

நடைபெற்று வரும் இந்த உலகக்கிண்ண போட்டியில் முதலாம் பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.இரண்டாவது பிரிவில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அணியாக தகுதி பெறும் அணி இந்தியாவா அல்லது அவுஸ்திரேலியாவா என்பது இன்றே முடிவாகும்.

Related posts: