107 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் லார்ட்ஸில் துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
2வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங்கில் அசத்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் அசத்திய ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
Related posts:
கோலியே இலக்கு - புவனேஸ்வரகுமார்
தாய்லாந்தில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள்!
இந்தியன் ப்ரீமியர் லீக் - டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றி!
|
|