10ஆண்டுகளின் பின்னர் பெற்ற இரண்டாவது சதம் – உபுல் தரங்க சாதனை!
Tuesday, November 1st, 2016
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க பெற்றுக்கொண்ட சதம் உலக சாதனைக்கு உள்ளாகியுள்ளார்.
அது இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் (1945 இற்கு பின்னர்) ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பல காலங்கள் கடந்து மற்றுமோர் டெஸ்ட் சதம் அடித்துள்ள வீரராக உபுல் தரங்க திகழ்கிறார்.
உபுல் தனது முதல் டெஸ்ட் சதத்தினை 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 08ம் திகதி சாதித்திருந்தார். ஆனால், அவரது இரண்டாவது டெஸ்ட் சதமானது 10 வருடங்களுக்கு பின்னர் நிகழ்ந்துள்ளது. அது 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதியாகும். இவ்விரண்டு சதங்களுக்கும் இடைப்பட்ட காலமானது 3888 நாட்களாகும்.
அதற்கு முன்னர் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் சதம் குவிக்க அதிக நாட்கள் எடுத்த வீரராக சிம்பாவ்பே அணியின் வீரர் ஹெமில்டன் மெசகட்சா திகழ்கிறார். அவரது சதங்களுக்கு இடைப்பட்ட காலமானது 3660 நாட்களாகும்

Related posts:
|
|
|


