மழை காரணமாக கைவிடப்பட முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி!
Friday, August 9th, 2019
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இந்த போட்டி நேற்று மேற்கிந்திய தீவுகள் கயானாவில் இடம்பெற்றது போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
குறித்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி தாமதித்தது. இந்த நிலையில் 34 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டி ஆரம்பமானது.
இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. பின்னர் இந்த போட்டி கைவிடப்பட்டது.
Related posts:
ஐ.பி.எல்லில் விளையாடும் திறமை இலங்கையருக்கு இல்லை-முரளிதரன் !
மெசியை முந்திய ரொனால்டோ!
கால்பந்தாட்டத் தொடர்: சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!
|
|
|


