ஓராண்டு தடைக்குபின் ஸ்மித் விஸ்வரூபமெடுத்தது எப்படி – இந்திய ஜாம்பவான்!
Saturday, September 7th, 2019
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்தது குறித்து இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்டில், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 211 ஓட்டங்கள் விளாசி அசத்தினார்.
இந்த ஆஷஸில் தொடர்ந்து அசத்தி வரும் அவருக்கு வீரர்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஓராண்டு தடையில் இருந்தார் ஸ்மித்.
அதன் பின்னர் தடை முடிந்து களமிறங்கிய அவர், துடுப்பாட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரும் அவரை பாராட்டியதுடன், ஸ்மித் பாஃர்முக்கு திரும்பியது குறித்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘சிக்கலான தொழில்நுட்பம், ஆனால் ஒழுங்கான மனநிலை. இதுதான் எல்லாவற்றையும் தாண்டி ஸ்மித்தை போட்டிக்கு தயார் செய்துள்ளது. நம்ப முடியாத Comeback’ என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


