ஆப்கானை வென்றது சிம்பாம்வே..!
Saturday, September 21st, 2019
பங்களாதேஷில் இடம்பெறும் முத்தரப்பு 20க்கு 20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி, 7 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஸிம்பாப்வே அணி, 19.3 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
எவ்வாறாயினும், இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பங்களாதேஷ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 2 புள்ளிகளுடன் சிம்பாப்வே அணி 3ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பங்களாதேஷின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஹொட்னி வொல்ஷ் !
புதிய மைல்கல்லை அடையும் இந்திய அணி!
சுதந்திர கிண்ண தொடரில் திடீர் மாற்றம்!
|
|
|


