ஸ்டார்க் விளையாடுவார்!

உபாதை முழுமையாகக் குணமடையாத நிலையிலும், தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் பங்குபற்றிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், 2ஆவது போட்டியிலும் பங்குபற்றுவார் என அறிவிக்கப்படுகிறது.
முதலாவது போட்டியில், போதிய தயார்படுத்தலின்றி அதிக ஓவர்களை வீசிய காரணத்தால், காயமொன்று ஏற்படுவதற்கு ஸ்டார்க்குக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர்கள் அறிவித்த போதிலும், அதையும் மீறி, அவர் இப்போட்டியில் விளையாடவுள்ளார்.
முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்த நிலையில், நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள 2ஆவது போட்டியில் வெற்றியடைவதை, அவுஸ்திரேலிய அணி முக்கியமாகக் கருதுவதையே இது எடுத்துக் காட்டுகிறது.
Related posts:
தோல்வியை தவிர்க்க சிம்பாப்வே அணி போராட்டம்!
39 தொடர் வெற்றி: ரியல் மாட்ரிட் அணி சாதனை!
ரங்கன ஹேரத்தை வாழ்த்திய டெண்டுல்கர்
|
|