ஶ்ரீலங்கா கிரிக்கட் மீதான விசாரணை நிறைவடையவில்லை – சர்வதேச கிரிக்கட் பேரவை!

சிறிலங்கா கிரிக்கட் மீதான விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்று சர்வதேச கிரிக்கட் பேரவை(ICC) அறிவித்துள்ளது.
ஊழல் மற்றும் ஆட்ட நிர்ணய சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறிலங்கா கிரிக்கட்டுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இந்த விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு போதிய சான்றுகள் இல்லை என்றும் சிறிலங்கா கிரிக்கட் நேற்று(11) அறிவித்திருந்தது.
ஆனால் இதனை சர்வதேச கிரிக்கட் பேரவையின்(ICC) பேச்சாளர் ஒருவர் மறுத்துள்ளார். இந்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும், தொடரும் விசாரணை குறித்த தகவலை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பந்து தாக்கியதால் மூளையில் ரத்த கசிவு: ஆபத்தான நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்!
வீனஸ் கார் மோதிய விவகாரம்- புதிய ஆதாரம்!
ஆசியக் கிண்ணம்: தவான் சதம் - போராடி வென்றது இந்தியா!
|
|