வோர்னர் அதிரடி: இறுதிப் போட்டியில் ஹைதராபாத் – பெங்களூர்!

Sunday, May 29th, 2016

டேவிட் வோர்னர் தனி ஆளாக நின்று அடித்­தாட, இறு­தியில் அவ­ருக்கு துணையாக நின்று பிபுல் ஷர்மா அதி­ர­டி­காட்ட குஜராத் அணியை வீழ்த்தி இறு­திப்­போட்­டிக்கு நுழைந்­தது ஹைத­ராபாத் அணி.

இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள இறு­திப்­போட்­டியில் கோலி தலை­மை­யி­லான பெங்களூர் அணியை சந்­திக்­கி­றது ஹைத­ராபாத் அணி.

இறு­திச்­சுற்­றுக்குள் நுழையும் இரண்­டா­வது அணி எது என்­பதை நிர்­ண­யிக்கும் 2ஆவது தகுதி சுற்றில் குஜராத் லயன்ஸும்இ ஹைத­ராபாத் சன் ரைஸர்ஸ் அணியும் நேற்றுமுன்தினம்  டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதா­னத்தில் மோதின.

இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற வோர்னர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரி­வித்தார். இதன்­படி முதலில் கள­மி­றங்­கிய குஜராத் அணி சீரான இடை­வெ­ளியில் விக்கெட்­டுக்கள் விழஇ மறு­மு­னையில் கணி­ச­மான ஓட்­டங்­க­ளையும்

சேர்த்­த­படி இருந்­தது. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 162 ஓட்­டங்­களைப் பெற்றது குஜராத்.

குஜராத் அணியில் அதி­க­பட்­ச­மாக பிஞ்ச் 50 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்தார். இதை­ய­டுத்து 163 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய ஹைத­ராபாத் அணி 19.2 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக் களை இழந்து 163 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டியது.

டேவிட் வோர்னர் இறு­திவரை களத்தில் நின்று அணியை வெற் ­றிக்கு அழைத்துச் சென் றார்.  இவர் இந்தப் போட்­டியில் 93 ஓட்­டங்­களை விளா­சினர். இவரைத் தவிர இவ­ருக்கு துணை நின்ற ஷர்மா 27 ஓட்­டங்­களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் அனை­வரும் ஒற்றை இலக்க ஓட்­டங்­க­ளுடன் ஆட்டமிழந்து ஏமாற்­றினர்.

அணித் தலைவர் என்ற பொறுப்பை சரியாக நிறைவேற்றிய வோர்னர் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்து வந்திருக்கி றார்.

Related posts: