வேல்ஸ் அணியை வென்னது இங்கிலாந்து!

யூரோ கால்பந்து தொடரில் நேற்று பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து– வேல்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் கரேத் பேல் ஃப்ரீகிக் மூலம் முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் வேல்ஸ் 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 56-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் வார்டி கோல் அடித்தார். இதன்மூலம் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 2-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டுரிட்ஜ் கோல் அடிக்க இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில்முன்னிலை பெற்றது. இறுதி வரை போராடிய வேல்ஸ் அணியால் மேலும் ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி வேல்சை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த தொடரில் இங்கிலாந்துக்கு இது முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் அந்த அணி ரஷ்யாவுடன் டிரா செய்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.
Related posts:
தோல்விகளுக்கு சங்கா மகேலவின் ஓய்வை காரணம் காட்ட முடியாது- டில்ஷான்
உலகக்கோப்பை தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் தெரிவிப்பு!
|
|