வன்னி கால்பந்தாட்டப் போர் அடம்பனில் ஆரம்பம்!

வன்னி கால்பந்தாட்டப்போர் கிண்ணத்துக்கான தொடர் இன்றும் நாளையும் மன்னார் அடம்பன் பிரதேச சபை மைதானத்தில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் 24 கழகங்கள் பங்குபற்றுகின்றன. “ஏ” பிரிவில் மன்னார் சென்.ஜோசப் அணி, வவுனியா மருதநிலா அணி, முல்லைத்தீவு சென்.யூட் அணி ஆகியனவும் “பி” பிரிவில் மன்னார் இணையும் கரங்கள் அணி, முல்லைத்தீவு இளம் பறவைகள் அணி, கிளிநொச்சி உதயதாரகை அணி ஆகியனவும் “சி” பிரிவில் மன்னார் சென். மேரியன்ஸ் அணி, கிளிநொச்சி உருத்திரபுரம் அணி, முல்லைத்தீவு விக்னேஸ்வரா அணி ஆகியனவும் “டி” பிரிவில் மன்னார் சென். சேவியர் அணி, வவுனியா யங்ஸ்ரார் அணி, முல்லைத்தீவு சுப்பார்ராங் அணி ஆகியனவும் “இ” பிரிவில் மன்னார் சுடரொளி அணி, கிளிநொச்சி நாச்சிக்குடா சென். மேரிஸ் அணி, முல்லைத்தீவு இளம் தென்றல் அணி ஆகியனவும் “எப்” பிரிவில் மன்னார் யூனியன் அணி, முல்லைத்;தீவு முள்ளியவளை வளர்மதி அணி, கிளிநொச்சி இளந்தளிர் அணி ஆகியனவும் “ஜி” பிரிவில் மன்னார் சென்.தோமஸ் அணி, கிளிநொச்சி இரணைமாதா சென்.மேரிஸ் அணி, வவுனியா யுனிபைட் அணி ஆகியனவும் “எச்” பிரிவில் மன்னார் சென்றலைட்ஸ் அணி, வவுனியா ஈஸ்வரன் அணி, மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் மகாவித்தியாலய அணி ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
Related posts:
|
|