லசித் மாலிங்கவிற்கு ஏற்பட்டுள்ள உபாதை பாரதூரமானது !

Friday, April 22nd, 2016
லசித் மாலிங்கவிற்கு ஏற்பட்டுள்ள உபாதை பாரதூரமானது என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வைத்திய குழுத்தலைவரும், விளையாட்டுத்துறை நிபுணருமான வைத்தியர் ஹரிந்து விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்க நேற்றையதினம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வைத்திய குழு முன்னிலையில் பிரசன்னமான பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வைத்திய குழு முன்னிலையில் பிரசன்னமாக வேண்டும் என லசித் மாலிங்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, வைத்திய குழுவின் முன்னிலையில் பிரசன்னமாவதற்காக லசித் மாலிங்க நேற்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சமுகமளித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரும் இந்தத் தருணத்தில் சமூகமளித்திருந்தனர். லசித் மாலிங்க கடந்த வாரம் இந்தியாவிற்கு சென்ற போதிலும் காலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக இன்டியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: