ரோஹித் சர்மா வைத்தியசாலையில்!

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இலண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
நியுஸிலாந்து அணிக்கெதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இவர் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவர் எதிர்வரும் மூன்று மாதங்கள் வரை போட்டிகளில் கலந்துக்கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்தது எனவும், உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒருநாள் போட்டிக்கான நுழைவுச்சீட்டு அனைத்தும் தீர்ந்தது!
சர்ரே அணிக்காக 8வது சதத்தை பூர்த்தி செய்த சங்கா!
கோலியின் தொடர்பில் கும்ப்ளே!
|
|