யாழ் பல்கலை அணி வெற்றி!
Friday, September 22nd, 2017
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் நடத்தும் கால்பந்தாட்டத் தொடரில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் போராடி வெற்றிபெற்றது.
அரியாலை கால்பந்தாட்டப் பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்த ஆட்டம் இடம்பெற்றது. ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் ஐயனார் அணியின் சார்பாக முதல் கோலைப் பதிவுசெய்தார் சுபராஜ். 19ஆவது நிமிடத்தில் பல்கலையின் கோலைப் பதிவுசெய்து பதிலடி கொடுத்தார் பத்ம நிதர்சன். மாற் றங்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி. இரண்டாவது பாதியிலும் கோல் கணக்கில் மாற்றங்கள் ஏற்படவில்லை. சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக அணி. சிறந்த வீரராக பல்கலைக் கழகத்தின் சல்மான் பாருஸ் தெரிவானார்.
Related posts:
|
|
|


