யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றி!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அணி களத்தடுப்பினைதெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன் கல்லூரி அணி 15.1 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 13 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்தியகல்லூரி அணி 35 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
2 ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யூனியன் கல்லூரி அணி 12.1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 12 ஓட்டங்களைபெற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில் மத்தியகல்லூரி இனிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய கல்லூரி சார்பாக சில்வேஸ்ரன் சிறப்பாக பந்துவீசி முதல் இனிங்ஸில் 7 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் கார்த்தீபன் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|