யங்ஹென்றிஸ், மற்றும் சண்டிலிப்பாய் இளைஞர் அணிகள் கிண்ணத்தை கைவென்றன!
Friday, January 19th, 2018
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியும் ஆண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணியும் கிண்ணம் வென்றன.
சண்டிலிப்பாய் இந்து இளைஞர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இந்த இறுதியாட்டங்கள் இடம்பெற்றன.
பெண்களுக்கான இறுதியாட்டத்தில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக அணி மோதியது. 2:0 என்ற கோல் கணக்கில் யங்ஹென்றிஸ் அணி வெற்றிபெற்றது.
ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நியூஸ்ரார் அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக அணி மோதியது. 2:0 என்ற கோல் கணக்கில் இந்து இளைஞர் அணி வெற்றி பெற்று கிண்ணம் வென்றது.
Related posts:
எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட 9 ஆண்டு சிறை தண்டனை உறுதி!
மத்தியுஸ், சந்திமல், திஸரவினால் பிரச்சினை - இலங்கையின் தெரிவுக்குழு தலைவர் அசந்தடி மெல்!
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிருப்தி !
|
|
|


