மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து மஞ்சுல குமார ஓய்வு!

Tuesday, June 27th, 2017

இலங்கையின் சார்பில் உயரம் பாய்தல் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை பெற்ற மெய்வல்லுனர் வீரரான மஞ்சுல குமார மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளை பெற்றுள்ளார்.அவர் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளார்.

மஞ்சுல குமார ஆசிய செம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளதுடன், தெற்காசிய போட்டிகளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்அத்துடன் இவர் ஒலிம்பிப், பொதுநலவாய நாடுகளின் மெய்வல்லுனர் போட்டிகள், உலக மெய்வல்லுனர் செம்பியன்ஷிப் போட்டிகள் உட்பட 20 சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சிவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்கவை நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும் தற்போது பங்களாதேஸ் அணியின் பிரதான பயிற்சியாளராகவும் சந்திக ஹத்துருசிங்க கடமையாற்றுகின்றார்.எவ்வாறாயினும் இவர் பங்களாதேஸ் அணியின் பயிற்சியாளராக நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ளமையினால் இலங்கை அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திக்க ஹத்துருசிங்க 2019ஆம் ஆண்டு வரை பங்களாதேஸ் அணியின் பயிற்சிவிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: