முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய!

Monday, March 4th, 2019

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா – இந்தியாவிற்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியானது ஐதராபாத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணியின் சார்பில், கவாஜா அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் (40), ஸ்டோய்னிஸ் (37), கர்ரே (36) ரன்கள் எடுத்திருந்தனர்.

இந்திய அணியின் சார்பில் முகமது சமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி தரும் விதமாக துவக்க ஆட்டக்காரர் ஷிகர்தவான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் சேர்ந்த ரோகித் – கேப்டன் கோஹ்லி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

44 ரன்கள் எடுத்திருந்தபோது ஜம்பா பந்துவீச்சில் எல்.பி.டபிள்வூ ஆகி விராட்கோஹ்லி வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களே ரோகித்சர்மாவும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த அம்பத்தி ராயுடுவும் 19 ரன்களில் நடையை கட்ட 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணற ஆரம்பித்தது. அடுத்து களமிறங்கிய டோனி- கேதார் ஜாதவ் கூட்டணி பொறுமையாக துவங்கி அதிரடி காட்ட ஆரம்பித்தனர். கேதர் ஜாதவ் 70 பந்துகளிலும், தோனி 68 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

141 ரன்களை சேர்த்த இந்த கூட்டணியில், கேதர் ஜாதவ் 81(87), தோனி 59(72) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் கேதார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related posts: