முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 297 ஓட்டங்கள் குவிப்பு!

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 297 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கேப் டவுனில் நேற்று தொடங்கியது. இதில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீபன் குக், டீன் எல்கர் ஆகியோர் களமிறங்கினார்கள். குக் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் லக்மல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த அம்லா 29 ஓட்டங்களிலும், டுமினி டக் அவுட்டாகவும் ஆட்டம் இழந்தனர். டீன் எல்கர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். டுபிளிசிஸ் (38), பவுமா (10) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். தொடர்ந்து அசத்திய டீன் எல்கர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
அவர் 129 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய டி கொக் அரைசதம் அடித்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டி காக் 68 ஓட்டங்களுடனும், அப்போட் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் குமார 3 விக்கெட்டும், லக்மல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
Related posts:
|
|