முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து!

Friday, December 9th, 2016

மும்பை டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் 89 பந்தில் 50 ஓட்டங்கள் அடித்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் குக் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். அவர் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜென்னிங்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். இதனால் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19வது வீரர் என்ற பெருமையை ஜென்னிங்ஸ் பெற்றார்.

அரைசதம் அடித்த நிலையில் மொயீன் அலி அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடுத்த 2வது பந்தில் ஜென்னிங்ஸ் 112 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த பேர்ஸ்டோவ் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 6வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார்

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 94 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களுடனும், பட்லர் 18 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

256057.3

Related posts: