முடிசூடினார் ஜோகோவிச்!
Monday, January 9th, 2017
கட்டார் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியிலவ் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் சாம்பியம் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், கடந்த 28 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த முர்ரேவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜோகோவிச்.
முன்னதாக மூன்று மணிநேரம் நடந்த போட்டியின் முடிவில் 6-3, 5-7, 6-4 என்ற செட்களில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நோவாக் ஜோகோவிச். தோல்விக்கு பின்னரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்டி முர்ரே தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். செர்பிய நாட்டைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச் இரண்டாம் இடத்தில் உளளார்.

Related posts:
பந்துவீச்சில் பிரகாசிக்குமா இலங்கை!
ஓய்வை அறிவித்த அஜந்த மென்டிஸ் ..!
அஞ்சலோ மெத்யூஸ் , தினேஷ் சந்திமால் சதம் - இலங்கை அணி முதல் இனிங்ஸில் 506 ஓட்டங்கள்!
|
|
|


