மீண்டும் விண்ணப்பித்த கும்ப்ளே!
Thursday, June 8th, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே மீண்டும் விண்ணப்பித்துள்ளார். தற்போதைய பயிற்சியாளரான கும்ப்ளேவுக்கும், அணித்தலைவரான வீராட் கோஹ்லிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அணி வீரர்கள் மத்தியிலும் கும்ப்ளேவுக்கு ஆதரவு இல்லை என தெரிகிறது. இந்நிலையில் கடந்தாண்டு பதவியேற்றுக் கொண்ட அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் சாம்பியன் டிராபி தொடருடன் முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்காக அனில் கும்ப்ளே மறுபடியும் விண்ணப்பித்துள்ளார், வீரேந்திர ஷேவாக் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டாம் மூடி ஆகியோரும் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
Related posts:
சிம்பாப்வே பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக்!
டக்வொர்த் லீவிஸ் முறை – ஐசிசி மீது கடும் குற்றச்சாட்டு!
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த வாய்ப்பை ஓரிரவில் இ...
|
|
|


