மீண்டும் களமிறங்குகிறார் லசித் மலிங்கா – ரசிகர்கள் உற்சாகம்!
Wednesday, June 6th, 2018
கனடா டி20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லசித் மலிங்கா உட்பட 4 இலங்கை வீரர்கள் இதில் விளையாடவுள்ளனர்.
தொடரானது ஜூன் 28-ஆம் திகதி தொடங்கி ஜூலை 15-ஆம் திகதி முடிவடைகிறது.
இதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது. டொரண்டோ நேஷனல்ஸ் வாங்கவுர் நைட்ஸ் வின்னிபெக் ஹவுக்ஸ் எட்போண்டன் ராயல்ஸ் மொண்றியல் டைகர்ஸ் என அணிகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்டீவ் ஸ்மித் பொல்லார்ட் டேரன் பிராவோ அப்ரிடி போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இலங்கை அணி சார்பாக நான்கு வீரர்கள் தொடரில் பங்கேற்கிறார்கள். லசித் மலிங்கா தஷுன் ஷனகா திசாரா பெரேரா இசுரு உடனா ஆகிய நால்வரும் மொண்றியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்கள்.
Related posts:
மெதடிஸ்த பெண்கள் மாவட்டச் சம்பியன்!
இலங்கை - பங்களாதேஷ் ஒருநாள் போட்டிகளுக்கான அணிவீரர்கள் அறிவிப்பு!
கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடை...
|
|
|


