மீண்டும் களத்தில் ஷரபோவா!
Wednesday, October 12th, 2016
தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியமை காரணமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, அறக்கட்டளை நிகழ்ச்சியொன்றுக்கான போட்டியொன்றில் பங்குபற்றினார். தடை விதிக்கப்பட்ட பின்னர் அவர், டென்னிஸ் அரங்கொன்றில் முதன்முறையாக, இப்போட்டியிலேயே பங்குபற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் 2 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட அவரது தடை, பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து, 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. அத்தடை அவ்வாறு குறைக்கப்பட்டதைத் தொடர்ந்தே, உத்தியோகபூர்வமற்ற போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, அவருக்கு அனுமதி கிடைத்தது.
இரட்டையர் போட்டிகளிலேயே அவர், இங்கு பற்றுபற்றினார். ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் இடம்பெற்ற இப்போட்டிகளில், அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் ஜோன்சனுடன் முதலாவது போட்டியில் விளையாடிய அவர், மார்ட்டினா நவ்ரத்திலோவுக்கும் லியஸெல் ஹூபருக்கும் எதிரான போட்டியில் தோல்வியடைந்தார். அடுத்த போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜாம்பவானான ஜோன் மக்என்றோயுடன் விளையாடினார். அப்போட்டியில், அவர்களை எதிர்த்து நவ்ரத்திலோவா, அன்டி றொடிக் ஜோடி விளையாடியிருந்தது.

Related posts:
|
|
|


