மீண்டும் இலங்கையை முந்திய வாங்கதேசம்!
Thursday, May 25th, 2017
அயர்லாந்தில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றியினை தக்க வைத்தது.
வெளிநாடு ஒன்றில் பங்களாதேஷ் அணியானது நியூசிலாந்து அணியினை தோற்கடித்தது இதுவே முதன் முறையாகும்.இதன்படி, இலங்கையினை பின்தள்ளி பங்களாதேஷ் அணி சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் வரிசையில் முன்னேறியுள்ளது.
இதற்கு முன்னர் ஆறாவது இடத்தில் இருந்த இலங்கை அணி ஏழாவது இடத்திற்கு பின்தள்ளி உள்ளது. பங்களாதேஷ் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
குறித்த பட்டியலில் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா முறையே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
Related posts:
போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டில்ஷான்?
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேத்தியூஸ் !
முன்னாள் அனுபவ வீரர்களின் உதவியை கோரியுள்ள ஹத்துருசிங்க!
|
|
|


