மீண்டும் அதிரடி காட்டும் உபுல் தரங்க!

Wednesday, April 25th, 2018

நடைபெற்று வருகின்ற, மாகாண ரீதியிலான “சுபர் 4” முதல்தர கிரிக்கெட் தொடரின் இறுதி வாரப் போட்டிகளின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று முடிவடைந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் அண்மைக்காலமாக விளையாடிவரும், உபுல் தரங்க முதல்தரப் போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட முடியும் என்பதை சதம் ஒன்றுடன் இன்றைய நாளில் நிரூபித்துள்ளார்.

மறுமுனையில் ரொஷென் சில்வா தனது முதல்தர கிரிக்கெட்டில் மற்றுமொரு சதத்தினைக் குறித்துக் கொள்ள தயராகுகின்றார். அம்பந்தோட்டையில் இடம்பெற்று வருகின்ற இந்த ஆட்டத்தில், காலி அணியின் இமாலய முதல் இன்னிங்சை (425) அடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த கண்டி அணி

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் போது, 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர்,இதன் பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த காலி அணி ஒரு ஓட்டத்தைப் பெற்றிருந்தது.

களத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லஹிரு மிலந்த ஓட்டங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவ வர்ணபுர 1 ஓட்டத்துடனும் இருந்தனர்.ஆட்டத்தின் மூன்றாம் நாளில் எதிரணியினை விட 241 ஓட்டங்கள் முன்னிலை அடைந்தவாறு இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த காலி அணிக்கு,

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக பங்களிக்காத போதிலும், மூன்றாம் இலக்கத்தில் ஆடிய உபுல் தரங்க அட்டகாசமான சதம் ஒன்றினைக் கடந்து சிறப்பாக செயற்பட்டிருந்தார்.இது முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் தரங்க பெற்ற 23ஆவது சதமாகவும் அமைந்திருந்தது.

தரங்கவின் விக்கெட்டை அடுத்து, காலி அணியின் மத்தியவரிசை வீரர்கள் பிரகாசிக்காத போதிலும் ரொஷேன் சில்வா தனது பொறுமையான துடுப்பாட்டத்தினால் தனது தரப்புக்கு கைகொடுத்திருந்தார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்சிலும், சதம் கடந்திருந்த ரொஷேன் சில்வா மீண்டும் அரைச்சதம் ஒன்றைக் கடந்து,மாகாண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவராக மாறினார்.சில்வா, தரங்க ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு காலி அணி மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில்,

இரண்டாவது இன்னிங்சில் 298 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து கொழும்பு அணியை விட மிகப்பெரிய ஓட்டங்கள் (538) முன்னிலையுடன் காணப்படுகின்றது.களத்தில் ரோஷென் சில்வா 88 ஓட்டங்களுடனும், தம்மிக்க பிரசாத் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர். கொழும்பு அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளரான சாமிக்க கருணாரத்ன 3 விக்கெட்டுக்களையும், லஹிரு சமரக்கோன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

Related posts: