மாலுசந்தி மைக்கலை வீழ்த்தி குறிஞ்சி குமரன் சம்பியன்!

Wednesday, October 5th, 2016

தம்பளை நாவலர் விளையாட்டு கழகம் நடத்திய யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வந்த அணிக்கு 20ஓவர் 11பேர் கொண்ட கிரிக்கெட் தாடரில் மாலுச்சந்தி மைக்கல் அணியை 7 இலக்குகளால் வீழ்த்தி குப்பிளான் குறிஞ்சிக் குமரன் அணி சம்பியனாகியது.

மாதனை கண்ணகை அம்மன் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற  அறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மாலுசந்தி  மைக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றது. அமீரதன் 20, ரகுவரன்12 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு களமிறங்கிய குறிஞ்சிக் குமரன் அணி 17 ஓவர்களில் 3 இலக்குகளை இழந்து வெற்றிப்பெற்றது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக நாகப்பா 36, சாந்தன் 55 ஓட்டங்களை பெற்றனர். இறுதியில் 7 விக்கட்டுகளினால் குப்பிளான் குறிஞ்சிக் குமரன் அணி வெற்றி பெற்று சாம்பியனானது.

SL-spends-Rs-500-mln-every-year-to-control-rabies copy

Related posts: