மாலிங்க ஒரு பிரபல துரும்பு – சமிந்த வாஸ்!

Friday, April 26th, 2019

ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிக்காட்டி வரும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவின் அனுபவமும், அவரது தலைமைத்துவப் பண்புகளும் 2019ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக அமையும் என இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ளூர் இருபதுக்கு இருபது தொடர் ஒன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு ஒன்றின் போது உரையாற்றுகையில்;

“கடந்த சில மாதங்களாக இலங்கை அணி எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக செயற்பட்டிருக்கவில்லை. எனினும், நான் உலகக் கிண்ணத்திற்காக எமது தேர்வாளர்கள் தெரிவு செய்துள்ள அணி இணைப்பை கருத்திற் கொள்ளும் போது அவர்கள் நல்ல வேலை ஒன்றினையே செய்திருக்கின்றனர் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

நாம் இங்கே இருந்து தான் எடுக்க வேண்டி உள்ளது, இப்போது வீரர்களுக்கு அவர்களை அவர்களே இனம்கண்டு நாட்டுக்காக விளையாட வேண்டி இருக்கின்றது. ”

“மாலிங்க உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகம் எதுவும் கிடையாது, அதோடு இலங்கையிலும் அவர் சிறந்தவராக உள்ளார். நாம் அவரை ஒரு பந்துவீச்சாளராக தங்கியிருக்கின்றோம், அவர் அவரது தலைமைத்துவ ஆற்றலினையும் வெளிக்காட்டியிருந்தார். அணிக்கு அவர் தனது நூறு சதவீத பங்களிப்பினையும் வழங்கியிருந்தார். நாங்கள் அவரை ஒரு நாளில் மும்பை அணிக்காக (ஐ.பி.எல்) போட்டிகளில் ஆடுவதனையும், அடுத்த நாளில் இலங்கையில் (உள்ளூர் தொடரில்) விளையாடுவதனையும் பார்த்தோம். இது அவர் (கிரிக்கெட்டின் மீது) கொண்டுள்ள ஈடுபாட்டின் தன்மையினையும் தன் நாட்டின் மீதும், அணி மீதும் கொண்டுள்ள ஈடுபாட்டின் அளவினையும் காட்டுகின்றது. எனவே, வரப்போகின்ற உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் முக்கிய கதாபாத்திரத்தினை அவர் (மாலிங்க) எடுப்பார். ”

Related posts: