மாலிங்கவின் சகோதரர் இந்தியாவில் – ஜெயவர்த்தன !
Monday, May 1st, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஜெயவர்தனே கலகலப் பூட்டியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதிய போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்றது.
போட்டி முடிந்த பின்னர் மும்பை வீரர் லசித் மாலிங்கா போன்று அச்சு அசல் உருவம் கொண்ட ஒரு நபர் மாலிங்காவை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, வெகு நாட்களுக்கு முன்னர் தொலைந்து போன தனது சகோதரரை மாலிங்கா கண்டுபிடித்து விட்டார் என கிண்டலாக கூறியுள்ளார்
Related posts:
இலங்கை- அவுஸ்திரேலிய டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தம்!
20 தொடரை இந்த அணி தான் வெல்லும் - ஜெயவர்த்தனே!
அவுஸ்திரேலிய T-20 தொடர: - லசித் உட்பட 03 முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு!
|
|
|


