மஹெலவிற்கு ஐ.சி.சி-யின் உயரிய பதவி!

Friday, June 1st, 2018

சர்வதேச கிரிக்கட் சபையான ஐ.சி.சி தனது ஆலோசனை குழாமில் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் முன்னாள் ஜாம்பவாக திகழ்ந்த மஹேல ஜயவர்தனவோடு இங்கிலாந்தின் தூணாக காணப்பட்ட அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் ஆகியோர் ஆலோசனை பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆலோசனைக் குழுவில் பயிற்சியாளர்களுக்கான நிரந்தரமான இடத்தை நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மைக் ஹேசன் கைப்பற்றியுள்ளார்.

 கடந்த பருவகாலத்தில் அவுஸ்திரேலியாவின் தலைமைப்பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டெரன் லீமன் உறுப்பினராக செயற்பட்டிருந்த போதிலும், மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் போது அவுஸ்திரேலிய அணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் மற்றும் கெமரூன் பேன்கிராப்ட் உள்ளிட்ட வீரர்களின் செயலூடாக அவுஸ்திரேலிய கிரிக்கட்டின் கறுப்பு பக்கம் எழுதப்பட்டது. இதன் விளைவாக பயிற்சியாளராகக் கடமையாற்றிய டெரன் லீமனும் தனது பதவிலியிருந்து விலகியிருந்தார். இதனால் ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக செய்ற்படும் தகுதியை இழந்திருந்தார், இந்த இடத்தை நிரப்பும் முகமாகவே மைக் ஹேசன் நியமனம் பெற்றுள்ளார்.

 2012ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டு வருகின்ற மைக் ஹேசன், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி வரை நியூசிலாந்து அணியை அழைத்து வந்தார். அதுமாத்திரமின்றி, அவரது பயிற்றுவிப்பில் 2015இல் டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாவது இடத்தையும், 2016இல் ஒரு நாள் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியமை குறிப்பிட்டு சொல்லத்தக்கது.

 ஆடவருக்கான ஆலோசனைக்குழாம் தவிர்த்து, மகளிர் கிரிக்கெட்டுக்கான பிரதிநிதியாக அவுஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் தலைவியான பெலின்டா கிளார்க் நியமனம் பெற்றுள்ளார். 1997, 2005 ஆண்டுகளில் மகளிர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியின் தலைவியாக செயற்பட்டவர், மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த (229) வீராங்கனையாகவும் இடம்பிடித்துள்ளார். முன்னதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனை கிளேர் கோனர் அந்தப் பொறுப்பிலிருந்தார்.

அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதியாக ஸ்கொட்லாந்து அணியின் தலைவர் கைல் கோட்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அயர்லாந்து அணியின் கெவின் ஓ பிரையன் முன்னதாக அந்தப் பொறுப்பில் இருந்தார். அயர்லாந்து அணிக்கு கடந்த வருடம் டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப்பெற்று ஐ.சி.சியின் முழு உறுப்புரிமை நாடாக மாறிய காரணத்தால் அந்த இடத்தை ஸ்கொட்லாந்து அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி ஆலோசனைக் குழு விபரம்

அவைத் தலைவர் – அனில் கும்ப்ளே

நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் – ஷசாங்க் மனோகர் (ஐ.சி.சி அவைத் தலைவர்), டேவிட் ரிச்சர்ட்சன் (ஐ.சி.சி நிறைவேற்று அதிகாரி)

முன்னாள் வீரர்கள் பிரதிநிதிகள் – அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் (இங்கிலாந்து), மஹேல ஜயவர்தன (இலங்கை)

இன்னாள் வீரர்கள் பிரதிநிதிகள் – ராகுல் ட்ராவிட் (இந்தியா), டிம் மே (அவுஸ்திரேலியா)

பயிற்சியாளர்களுக்கான நிரந்தரப் பிரதிநிதி –மைக் ஹேசன் (நியூசிலாந்து)

அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதி – கைல் கோட்ஸர் (ஸ்கொட்லாந்து)

மகளிர் கிரிக்கெட் பிரதிநிதி – பெலின்டா கிளார்க் (அவுஸ்திரேலியா)

எம்.சி.சி பிரதிநிதி – ஜோன் ஸ்டெபென்ஸன் (எம்.சி.சியின் தலைவர்)

முழு உறுப்புரிமை நாடுகள் பிரிதிநிதி – டேவிட் வைட் (நியூசிலாந்து கிரிக்கெட் நிறைவேற்று அதிகாரி)

ஊடக பிரதிநிதி -ஷோன் பொல்லொக் (தென்னாபிரிக்கா போட்டி மத்தியஸ்தர்களுக்கான பிரதிநிதி ௲ ரன்ஞன் மடுகல்லே (இலங்கை)

Related posts: