மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி !
Sunday, April 1st, 2018
கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 18.4 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சசிகலா சிறிவர்தன 3.4 ஓவர்களுக்கு 9 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 73 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 14.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
Related posts:
ஒரு நாள் போட்டிகளில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை!
ராஜஸ்தான் தலைமைப் பதவியில் இருந்து ஸ்மித் இராஜினாமா!
உலகக் கிண்ண கூடைப்பந்து - உலக சாதனை படைத்தார் யாழ்ப்பாண யுவதி!
|
|
|


