மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுனராக ஹேமந்த தேவப்பிரிய!

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக ஹேமந்த தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பிரபல பயிற்றுவிப்பாளரான ஹேமந்த தேவப்பிரிய 15 வருடங்களுக்கும் மேலாக பயிற்றுவிப் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.இவர் கொழும்பு கிரிக்கெட் கழகம் , என்சிசி பிங்கார கிரிக்கெட் அக்கடமி மற்றும் அண்மையில் புளும்பீல்ட் கிரிக்கெட் போன்றவற்றிற்கு பயிற்சி வழங்கிமை குறிப்பிடத்தக்கது.மேலும் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ஓஷதி வீரசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
இம்ரான் தாகீருக்கு அபராதம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல !
வெற்றிக்களிப்புடன் ஓய்வுபெற்றார் மாலிங்க!
|
|