போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டில்ஷான்?

Friday, August 19th, 2016

இலங்கை கிரிக்கெட்அணியின் சிரேஸ்ர வீரரான திலகரட்ன டில்ஷான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான டில்ஷானுக்கு தற்போது 39 வயதாகிறது. இதனால் அவர் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத டில்ஷான் இலங்கை அணியில் களமிறங்கி பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்த நிலையில் அவுஸ்ரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் முடிந்தவுடன் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் இதுவரையில் தனது ஓய்வு குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: