பொறுப்புடன் விளையாடவேண்டிய கட்டாயம் இலங்கைக்கு -ரங்கன ஹேரத்
Thursday, August 3rd, 2017
இலங்கை அணி பொறுப்புடன் துடுப்பெடுத்தாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதென ரங்கன ஹேரத் குறிப்பிட்டார்.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று (03) ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய மற்றும் இலங்கை அணிகளின் வீரர்கள் இன்று பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, மலிந்த சிறிவர்தன இந்தப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தனஞ்சய டி சில்வா அணியில் இடம்பிடிக்கக்கூடும் எனவும் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 எனும் கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
Related posts:
விலை போகாத ஸ்மித்தின் சுயசரிதை!
பிரபல கொல்ப் வீராங்கனை கொலை!
தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இலங்கை மகளிர் அணி!
|
|
|


