பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா!

Monday, April 9th, 2018

நடப்பபு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நடந்த மூன்றாவது லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

இதில், டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக், பவுலிங் தேர்வு செய்தார்.இதையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.இதில், மெக்கல்லம் (43), கோலி (31), டிவில்லியர்ஸ் (44), மந்தீப் சிங் (37) ஆகியோர் அதிரடி காட்டினர்.

இதையடுத்து, கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில், சுனில் நரேன் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.இவரைத் தொடர்ந்து வந்த உத்தப்பா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.இந்த நிலையில், நிதின் ரானா ௲ தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடி காட்டி ரன்கள் சேர்த்தனர்.இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் (35 ரன்கள் நாட் அவுட்), ரானா (34) இருவரும் அதிரடி காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: