புதிய மைல்கல்லை எட்டிய இலங்கை வீரர்!

Monday, October 9th, 2017

டெஸ்ட் போட்டிகளில் 3000 ஓட்டங்களை கடந்த 12வது இலங்கை வீரர் என்ற பெருமையை கருணாரத்னே பெற்றுள்ளார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை வீரர் கருணாரத்னே 196 ஓட்டங்கள் குவித்தார்.141 ஓட்டங்களை எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 3000 ஓட்டங்களை குவித்த 12வது இலங்கை வீரர் என்ற பெருமையை கருணாரத்னே பெற்றார்.44 போட்டிகளில் இதை அவர் செய்துள்ளார்.

இதற்கு முன்னர் சங்ககாரா, ஜெயவர்தனே உள்ளிட்ட ஜாம்பவான்கள் இதை செய்துள்ளனர்.இலங்கை அணியை பொருத்தவரையில் சங்ககாரா 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,400 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

Related posts: