புதிய ஒப்பந்தில் றொமேரோ!

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் சேர்ஜியோ றொமேரோ, நீண்ட காலத்துக்கான புதிய ஒப்பந்தமொன்றில், தனது கழகத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளார்.
ஆர்ஜென்டீனா அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கோல் காப்பாளரான றொமேரோ, அடுத்த கோடைகாலத்துடன், ஒப்பந்தம் நிறைவடையும் நிலையை எதிர்நோக்கியிருந்தார்.
ஆனால், தற்போது அவர், ஆகக்குறைந்தது 2021ஆம் ஆண்டு வரையாவது, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்காக விளையாடவுள்ளார். டேவிட் டீ கியா, ஜோயல் பெரெய்ரா ஆகியோருடன், கழகத்தில் இவர் போட்டிபோட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த றொமெரோ, “புதிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் மிகப்பெரிய கழகத்தில் இருப்பதற்கு, யார் தான் விரும்ப மாட்டார்கள்?” என்று தெரிவித்தார்.
Related posts:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடர் வரை அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார்?
20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் !
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் பிரிவு விசாரணை!
|
|