புஜாரா தொடர்பில் சேவாக் பெருமிதம்!
Sunday, November 26th, 2017
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புஜாரா போன்று ஒரு வீரர் கிடைப்பது கடினம்’ என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்றுள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட், ‘மழையால் ’டிரா’வில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் துவங்குகிறது.கொல்கத்தா டெஸ்டில், அணித்தலைவர் கோஹ்லி உட்பட அனைத்து இந்திய அணி வீரர்களும் சொதப்ப, புஜாரா மட்டும் நங்கூரமா நின்றார். தவிர, அந்த டெஸ்டில் 5 நாட்களும் பேட்டிங் செய்த இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் புஜாரா.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு இவரை விட சிறந்த வீரர் இனி கிடைப்பது சந்தேகம் என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ நாக்பூரில் எனக்கு தெரிந்து சச்சின், லட்சுமண், டிராவிட், கங்குலி ஆகியோரை தவிர, வேறு யாராலும் சிறப்பாக விளையாட முடியாது. தற்போதைய தொடரில் புஜாரா இலங்கைக்கு பெரும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கிறேன்.இனி இப்படி ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைப்பது மிகவும் கடினம். கோஹ்லிக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த வீரர் புஜாரா தான்.’ என்றார்
Related posts:
|
|
|


