பி.வி.சிந்துவின் வாழ்க்கையும் படமாகிறது!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படவுள்ளது.
‘சிந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சோனு சூட் இயக்கவுள்ளார். ‘பெரிதாய்க் கனவு காணுங்கள். கனவோடு நிற்காமல் கடுமையாக உழைத்து அதை அடையுங்கள்’ என்னும் செய்தியை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்படுகிறது.
உலக சினிமாவில், கிரிக்கெட் உலகைச் சேர்ந்த தோனி உள்ளிட்ட விளையாட்டு உலகை சேர்ந்த பலரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகின்ற நிலையில், அந்த வரிசையில் சிந்துவின் வாழ்க்கையும் படமாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
"டியர் விராட் நிறுத்த முடியுமா? - ஆரோன் பின்ஞ்
வெற்றி பெறுமா இலங்கை!
முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது பங்களாதேஷ்!
|
|