பிரேசிலிடம் அடிவாங்கிய ஸ்பெயின்!

Monday, October 9th, 2017

இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால் பந்து தொடரின் நேற்றைய போட்டியில் ஸ்பெயின் அணியை பிரேசில் அணி வீழ்த்தியுள்ளது.

கொச்சியில் நடைபெற்ற குறித்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரேசில் அணிகள் பலப்பரீட்டையில் ஈடுபட்டனர். பலம் வாய்ந்த இரு அணிகள் என்பதால் போட்டி ஆரம்பம் முதலாகவே விறுவிறுப்பாக நகர்ந்தது

இறுதியில் 2 – 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி பிரேசில் அணியினர் வெற்றியடைந்தனர்

இதேவேளை, கோவாவில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில், ஜெர்மன் அணியை கோஸ்டாரிகா அணி எதிர்கொண்டு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியடைந்தது.

மேலும், கோவா அரங்கத்தில் ஈரான் – கென்யா அணிகள் மோதிக்கொண்ட மற்றொரு போட்டி ஒன்றில் 3-1 என்ற கோல் கணக்கில் ஈரான் வெற்றியடைந்தது.

ஆரம்பம் முதலாகவே சிறப்பாக செயற்பட்ட ஈரான் அணியினர் அடுத்தடுத்து கோல்களைப் பெற்று முன்னிலை வகித்தது. போட்டியில் இறுதி கட்டத்தில் கென்யாவும் தன் பங்கிற்கு கோல் ஒன்றினை பெற்றுக் கொண்ட போதும் ஈரான் அணியினர் வெற்றியடைந்தனர்.

Related posts: