பாடும்மீன் அணி அபார வெற்றி வெளியேறியது மன்னார் கில்லறி!

Tuesday, October 18th, 2016

அபாரமான ஆட்டத்தின் மூலம் அணியை தோற்கடித்து பிளேஓப் சுற்றுக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளது பாடும்மீன் அணி. வல்வெட்டித்துறை கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் வடமாகாண வல்லவன் உதைபந்தாட்ட தொடரில் சுப்பர் -8 ஆட்டத்தில் நேற்று முன்தினம் மின்னொளியில் நடைபெற்ற போட்டியில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து மன்னார் கில்லறி அணி மோதியது.

தோல்வியடைந்தால் பிளேஓவ் சுற்று வாய்ப்பினை இழக்க நேரிடும் என்பதால் இரு அணியினருக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்தது. விறுவிறுப்புடன் ஆரம்பமான போட்டியின் 10ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற தண்ட உதையினை பாடும்மீன் வீரர் பிராங்கோ கோலாக மாற்றினார். தொடர்ந்த ஆட்டத்தின் 16ஆவது றிமிடத்தில் கில்லறி அணிக்கு கிடைக்கப்பெற்ற தண்ட உதையினை பாடும்மீன் கோல் காப்பாளர் இலாபகமாக தடுக்க கோல் பெறும் வாய்ப்பு பறிபோனது.

எனினும் முயற்சியுடன் ஆடிய கில்லறி 30ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற மூலை உதையினை டிலக்சன் தலையால் மட்டி கோலாக மாற்ற ஆட்டம் 01:01 என சமநிலையானது. உனினும் அட்ட வேகத்தினை அதிகரித்து ஆடிய பாடும்மீன் 35ஆவது நிமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான பந்து பரிமாற்றத்தினை விசோத் தலையால் முட்டி சிறப்பான கோலாக மாற்றி அணிக்கு வலுசேர்த்தார். அடுத்து 42ஆவது நிமிடத்திலும் சாந்தனின் துள்ளியமான உதை கோல் கம்பத்தின் மேல் கம்பத்தில் பட்டு உள்நுழைய முதற்பாதியாட்டத்தில் 03:00 என பாடும்மீன் முன்னிலை பெற்றது.

2ஆவது பாதியாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய பாடும்மீன் அணி கிறிஸ்ரன் மூலமாக 83ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோலினை பதிவு செய்தது.ஆட்டநேர முடிவில் 04:01 என பாடும்மீன் அணி வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக பாடும்மீன் அணியின் கொல் காப்பாளர் ராஜ் தெரிவுசெய்யப்பட்டார். தொடர்ந்து வரும் ஆட்டத்தில் பாடும்மீன் அணி மன்னார் சென்.லூசியஸ் அணியை சந்திக்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளேஓவ் சுற்றுக்குதகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 jaffna-001 copy

Related posts: