பாசையூர் சென் அன்ரனிஸ் சம்பியன் !
Tuesday, March 27th, 2018
கலைவாணி விளையாட்டுக்கழகம் நடத்திய 40 வயதுப் பிரிவினருக்கான கால்ப்பந்தாட்டத் தொடரில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி சம்பியனானது.
கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக் கொண்டது முதல் பாதி ஆட்டத்தில் பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழக அணி வீரன் முதலாவது கோலைப் பதிவு செய்தார் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி 1:0என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது இரண்டாம் பாதி ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரண்டு அணியினரும் மேலதிக கோல் எதனையும் பதிவு செய்யவில்லை ஆட்ட நேர முடிவில் பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது
Related posts:
|
|
|


