பாசையூர் அன்ரனிஸ் வித்தியாலயம் பளுதூக்கலில் தேசியத்தில் மகுடம்!

Friday, July 6th, 2018

கந்தளாய் அக்கிரபோதி தேசிய பாடசாலையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் 17 வயதுப் பெண்கள் பிரிவில் பாசையூர் சென்.அன்ரனிஸ் நோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயத்துக்கு 3 தங்கப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்தப் பாடசாலை அணி தேசியத்தில் சம்பியனாகவும் மாறியது.

திருகோணமலை கந்தளாய் அக்கிரபோதி தேசிய பாடசாலையில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. பாசையூர் சென்.அன்ரனிஸ் றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த திசாளினி 48 கிலோ எடைப்பிரிவில் சினெச் முறையில் 42 கிலோ பளுவையும் கிளின் அன்ட்ஜக் முறையில் 50 கிலோ பளுவையும் என மொத்தமாக 92 கிலோ பளுவைத் தூக்கி தங்கப்பதக்கத்தையும் ஆன்பியூலா சினெச் முறையில் 42 கிலோ பளு, கிளின் அன்ட் ஜக் முறையில் 50 கிலோ எடை என மொத்தமாக 92 கிலோ பளுவைத் தூக்கி தங்கப்பதக்கத்தையும் சுகன்யா 75 கிலோ எடைப்பிரிவில் சினெச் முறையில் 55 கிலோ பளு, கிளீன் அன்ட் ஜக் முறையில் 65 கிலோ பளு என்று மொத்தமாக 120 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

ஸ்ரெலா 53 கிலோ எடைப்பிரிவில் சினெச் முறையில் 32 கிலோ பளுவையும் கிளீன் அன்ட் ஜக் முறையில் 45 கிலோ பளுவையும் என்று மொத்தமாக 77 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Related posts: