பாகிஸ்தான் வீரர் ஜம்சத்துக்கு போட்டித் தடை!
Wednesday, February 15th, 2017
பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்சத்துக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் தற்காலிக அடிப்படையில் இந்தப் போட்டித் தடையை விதித்துள்ளது.
கடந்த வாரம் நிறைவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சகலவிதமான போட்டிகளில் ஜம்சத் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு வீரர்களுக்கு இவ்வாறு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹர்ஜீல் கான் ( ( harjeel Khan) மற்றும் ஹாலிட் லற்றிப் ( Khalid Latif ) ஆகிய வீரர்களே இவ்வாறு தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.ஊழல் மோசடிகள் குறித்த ஒழுக்க விதிகளை மீறியதாக ஜம்சத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts:
கோலுன்றிப் பாய்தலில் மகாஜனாவுக்கு வெள்ளி !
19 வயதுக்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான தொடர்: வடக்கு வெற்றி!
16 வயதில் கோடீஸ்வரனான இளம் வீரர்!
|
|
|


